கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று கோபுரங்களை பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.
தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே அக்கால ஞானிகள் வானுயர்ந்த கோபுரதரிசனம் நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும் என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment