html

Friday, 30 October 2015

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்




திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்


















திருத்தல வரலாறு

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.
















திருத்தலப் பெருமை

மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடியஐயடிகள் காடவர்கோன் நாயனார்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மாவிஷ்ணுஉருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள்நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.












கோயில் வரலாறு

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டகைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.












பாடற் தொகுப்புகள்

திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்

















கல்வெட்டுக்கள்

1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.
2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.
3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.
4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.
5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.
6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.
7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.


















இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 




முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.  மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது. 


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 












மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஸ்தலவிருட்சம்: 
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 











Thursday, 29 October 2015

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவள்ளூர்





சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருவாலங்காடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ளார் வடாரண்யேஸ்வரர். இங்குள்ள அம்மன் வண்டார்குழனி என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்.
12ம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில், சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் முதலாவது ரத்ன சபையாக திகழ்கிறது. இது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. காரைக்கால் அம்மையார் தனது மூத்த திருப்பதிகத்தை இத்தலத்தில் தான் பாடியுள்ளார்.








திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கோயிலுக்குச் செல்லும் வழி பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதியாகவே இருக்கிறது. அதையும் தாண்டி கோயில் இருக்கும் பகுதியில் தான் சிறிய கிராமம் உள்ளது.
கோயிலின் வாயிலை தாண்டி உள்ளே சென்றால் அங்கு மிகப்பெரிய மண்டபம், திறந்த வெளி, தோட்டம் காணப்படுகிறது. இடது பக்கம் விநாயகர் சன்னதியும், வலது பக்கம் முருகர் சன்னதியும் உள்ளன. அதையடுத்து கோயில் கோபுரம் காட்சியளிக்கிறது. கோயில் கோபுரத்தை கடந்ததும், அங்கும் உள் கோயிலைச் சுற்றி விசாலமான இடம் உள்ளது. வலது பக்கம் வண்டார்குழலி அம்மனும், இடது பக்கத்தில் மண்டபம் போன்ற அமைப்பும் உள்ளது. அதையும் கடந்து உள்ளே செல்லும் போது அதற்குள்ளும் மிக உயரமான தளத்துடன் கூடிய மண்டபம், மற்றும் ஏராளமான இறைவனின் சிலைகள், லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அங்குள்ள மண்டபத்தின் தூண்கள் அழகான வேலைபாடுடன் காட்சியளிக்கின்றன.
அங்கு நேரெதிரே வடாரண்யேஸ்வரர் வெள்ளி கிரீடத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். கருவறை வாயிலில் பால துவாரகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். மனதுக்கு அமைதியும், கண்களுக்கு விருந்தாகவும் காட்சி அளிக்கிறார் வடாரண்யேஸ்வரர். அவர்து உருவம் நமது மனக்கண்களில் நீங்காது நிலை பெற்று விடுகிறது. வடாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு இடது பக்கமாக கருவறையில் இருந்து வெளியே வந்ததும், சப்தா மாதாக்கள், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், சிவன், பிள்ளையார் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு பல சிறப்பு வாய்ந்த சிவலிங்கங்களும் வீற்றிருக்கின்றன.



















இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.
மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல், சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி
சென்னை – அரக்கோணம் ரயில் மார்கத்தில் அரக்கோணத்துக்கு முன்பிருக்கும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி சுமார் 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்துக்கு மிக அருகே ஏராளமான ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. எப்போதாவது வரும் ஒரு பேருந்தை தவிர, ஆட்டோ ஒன்றுதான் கோயிலையும், ரயில் நிலையத்தையும் இணைப்பதற்கான வழி. இது தவிர, சொந்த வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலை 205 ல் (சென்னை – ஆவடி – திருவள்ளூர் – ரேணிகுண்டா வழி) சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பேருந்து மார்கமாக செல்ல வேண்டும் என்றால், தாம்பரம் அல்லது ஆவடியில் இருந்து திருவள்ளூர் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் செல்லலாம். அதே போல அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சில பேருந்துகள்  திருவாலங்காடு வழியாகவும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் ஒரு அரசுப் பேருந்து ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வந்து செல்கிறது.




















ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருந்தாலும், புதிதாக கட்டிய கோயிலைப் போன்று கோயில் வளாகம் காட்சி அளிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
அதில் மாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அஷ்டாமத்து சனி போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு நமக்கு சொல்கிறது. இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது. இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்துள்ள கோயிலாகும்.
















மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.
மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 A.e. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.







திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்கள் குருதியை குடித்ததால் காளி அசுரர்களின் பண்பு பெற்று தவமியற்றிய முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனைத் துதிக்க, அவர் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள். இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். ஒருகால் ஊன்றி மற்றோர் காலைக் காதுவரை தூக்கி ஆடுவது பெண்களுக்கு இயல்பானதல்ல. இதனால் போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிய, அழியாக் கடவுள் ஆடலால் வென்ற தலம். ஈசனின் இந்த நடனத்தின் பெயர் ஊர்த்துவதாண்டவம். ஊர்த்துவதாண்டவ ஈசனின் சிற்பங்கள் பல தலங்களில் உள்ளபோதும் இங்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கம்பத்தடி மண்டபத்திலும், தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திரு ஓலக்கா மண்படத்திலும், சிதம்பரம் நடராஜப் பெருமாள் நிருத்த சபை மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.

காரைக்கால் அம்மையார்!  இயற்பெயர் புனிதவதியார். திருமணத்திற்குப் பிறகு இவர் கணவர் இவரை தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று வழிபட்டவுடன் இவர் வாழ விரும்பவில்லை. இறைவனைத் துதிக்கிறார். சிவன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று வினவ, தன் இளமையையும், அழகையும் நீக்கித் தன்க்குப் பேய் வடிவம் தரும்படி இறைஞ்சுகிறார். அவ்வாறே அருள்கிறார் ஈசன். தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைந்தார். சிவபெருமானின் திருக்கூத்தைக் காலமெல்லாம் கண்டு முக்தி அடைந்தார்.

பழையனூர் நீலி!   தேவாரப் பாடல்கள் திருவாலங்காட்டைப் பழையனூருடன் தொடர்புப்படுத்திப் பாடுகின்றன. பழையனூர் என்பது ஊர். திருவாலங்காடு, காடு. இது அன்றைய நிலை. நீலி என்ற பெண் முற்பிறப்பில் தன் கணவனால் வஞ்சித்துக் கொல்லப்படுகிறாள். இந்தப் பிறப்பில் அவனைப் பழிவாங்கும் பொருட்டு திருவாலங்காட்டில் பேயாகத் திரிகிறாள். தரிசனசெட்டி என்ற பெயரில் அவன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதை இனங்கண்டு தன்னோடு இணையுமாறு அழைக்கிறாள். அவன் பேயென்று இவளை நிராகரிக்கிறான். பழையனூரில் வாழும் வேளாளப் பெருமக்களிடம் சென்று முறையிடுகிறாள். மறுநாள் தீர்ப்பு வழங்குகிறோம்; இன்று ஒன்றாகத் தங்குங்கள் என்கிறார்கள். அதிர்ந்த தரிசனசெட்டி பேயால் தான் கொல்லப்படுவேன் என்று அஞ்சுகிறான். அனைவரும் அவன் உயிருக்கு உத்தரவாதம் அளித்ததால் ஒன்றாகத் தங்குகிறார்கள். நீலி அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொள்கிறாள். மிகுந்த மனவேதனையுற்ற வேளாளப் பெருமக்கள் 70 பேரும் தீமூட்டி அதில் பாய்ந்து மாய்ந்தனர். திருவாலங்காடு - பழையனூர் செல்லும் வழியில் அவர்கள் தீயில் பாய்ந்த இடத்தில் மண்டபம் உள்ளது.



தலச் சிறப்புகள்:
பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை. காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலம். 

சிவபெருமான் காளி தேவியை நடனத்தால் வென்ற தலம். அருகிலுள்ள காளி கோயிலை தரிசித்த பின்னரே இத்தல இறைவனைத் தரிசிப்பது மரபு.

காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலமாதலால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய சம்பந்தருக்கு தல எல்லையில் சிவபெருமான் காட்சியளித்து அருளியுள்ளார்.










கோபுர தரிசனம் கோடி புண்ணியம்




கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று  கோபுரங்களை  பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர  உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே  உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை  பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர  தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.

தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை  விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே  அக்கால ஞானிகள்  வானுயர்ந்த  கோபுரதரிசனம்  நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
விண்வெளியில்  கொட்டிக்கிடக்கின்றன கோடானுகோடி அற்புதங்கள். கோடிக்கணாக்கான சூரியர்களும் சந்திரர்களையும் தவிர என்னவெல்லாமோ  மனிதனின் அறிவுக்கு எட்டாத  ரகசியங்களைக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச ஞானத்தை ஓரளவு  அறிய முயற்சிப்பதுதான்  இன்றைய நவீன விஞ்ஞானம்


பிரபஞ்ச ஞானத்தை  அறிய முற்பட்ட சித்தர்களும்  ஞானிகளும் தமது திறமைக்கு  ஏற்ப  அறிந்த தகவல்களை  முழுமையாகப் பதிவு செய்யவில்லை..அதனால்தான் அவர்கள் அறிந்த விஷயங்கள்  காலத்தால்  மறக்கப் பட்டுவிட்டன. நமக்கு கிடைத்த அவர்களது  சில ஆய்வுகளே  சோதிடக் கலையாகவும்,மருத்துவ நூல்களாகவும், யோக சாத்திரங்கலாகவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும்  என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால  சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக  மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.